அம்பானி, அதானிக்கு ஆதரவாக உள்ளதால் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கிறது : எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: மத்திய அரசு தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சித்து வருகிறது என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் குளிர், வெயில், மழை என்று பாராமல் 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திரமோடிக்கு 56 இன்ச் மார்பளவு இருந்தால் மட்டும் போதாது அதற்குள் இதயம் இருக்க வேண்டும்.

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காலீஸ்தானிலிருந்து வந்தவர்கள் இது போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் அங்கிருந்து யார் வந்தார்கள் என்பது குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11 சுற்று பேச்சுவார்த்தை கூட நடத்தப்பட்டது.  விவசாயிகள் வேண்டாம் என்ற சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோர்களுக்கு வாக்கு கொடுத்துள்ளதால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு நாடகங்கள் நடத்தி வருகிறது. மாநில வேளாண் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் விவசாயிகள் குறித்து தவறான கருத்துக்கள் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள பதவியில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பை அறிந்து பேச வேண்டும். மேலவை தலைவர் பதவி விஷயத்தில் மஜதவின் சுயரூபம் தெரியவந்துள்ளது. மதசார்பற்ற கட்சி என்று தெரிவித்துக்கொண்டு அதிகாரத்துக்காக பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

ஷிவமொக்காவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சென்று ஆய்வு நடத்துவேன். இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் குரல் எழுப்படும்’’  என்றார். மத்திய அரசு தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோர்களுக்கு வாக்கு கொடுத்துள்ளதால் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு நாடகங்கள் நடத்திவருகிறது.

Related Stories: