எல்என்ஜேபி மருத்துவமனையின் ஐசியு பிரிவில் டெல்லி காவலருக்கு சிகிச்சை

புதுடெல்லி,ஜன.28: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களில் டெல்லி போலீசார் ஒருவர் எல்என்ஜேபி மருத்துவமனையின் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் சிக்கி போலீசார் மற்றும் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். போலீசார் தரப்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் போலீசார் ஒருவருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, தலையில் காயம், எலும்பு முறிவு போன்றவற்றிற்கும்  எல்என்ஜேபி மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுரேஷ்குமார தெரிவித்தார். இதனிடையே, விவசாயிகள் இருவர் வன்முறை சம்பவத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் டெல்லி அரசின் கீழ் இயங்கி வரும் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாயன்று இரவு படுகாயமடைந்த நிலையில் காவல் நிலைய அதிகாரி மற்றும் 10 காவலர்கள் உட்பட 22 பேர் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக  மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Related Stories: