×

கே.ஆர்.புரத்தில் 34 முறை போக்குவரத்து விதிமுறை மீறல்: வாலிபரிடம் இருந்து ரூ.19 ஆயிரம் அபராதம் வசூல்

பெங்களூரு, ஜன.28: பெங்களூரு கே.ஆர் புரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை 34 முறை மீறிய வாலிபரிடம் இருந்து ரூ.19 ஆயிரம் அபராதமாக வசூலித்துள்ளனர். பெங்களூரு கே.ஆர்புரம் போக்குவரத்து ஏ.எஸ்.ஐ உன்னித் கிருஷ்ணா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரது வாகனம் இதுவரை எவ்வளவு முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது என்று ஆய்வு செய்தனர். அதில் அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது, சிக்னல் ஜம்பிங், தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தியது மற்றும் ஓட்டி சென்றது என மொத்தம் 34 வழக்குகள் பதிவாகியிருந்தது.

ஒவ்வொரு விதிமுறைக்கும், அதற்கான அபராத தொகையை நிர்ணயம் செய்த போலீசார், இறுதியாக 34 வழக்கிற்கு சேர்த்து, ரூ.19 ஆயிரம் அபராதம் செலுத்தும்படி நோட்டீஸ் அளித்தனர். அதை பெற்று கொண்ட அவர் உடனே அபராத தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து அவரது வாகனத்தை கைப்பற்றிய போலீசார், வாலிபர் முழு அபராத தொகையும் செலுத்திய பின்னர் பைக்கை ஒப்படைத்தனர். இது குறித்து கே.ஆர்புரம் இன்ஸ்பெக்டர் தரப்பில் கூறும்போது; தவறு செய்தவர்கள் ஒரு நாள் மாட்டி கொள்வார்கள் என்பது உறுதி.

அதேபோன்று போக்குவரத்து விதிமுறையில் எப்பொழுது ஈடுபட்டாலும், ஒரு நாள் போலீசாரிடம் மாட்டி கொண்டால் முழு அபராத தொகையையும் செலுத்தவேண்டும். கே.ஆர்புரத்தில் வாலிபர் ஒருவர் 34 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.19 ஆயிரம் அபராதம் செலுத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : KR Puram ,teenager , 34 traffic violations in KR Puram: Rs 19,000 fine collected from teenager
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை