×

கர்நாடக மாநிலத்தில் 18 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் 18 மாநில நெடுஞ்சாலைகளை மூன்றாண்டுகளுக்கு பின் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 76 ஆயிரத்து 221 கி.மீட்டர் சாலைகள் உள்ளது. இதில் 19 ஆயிரத்து 721 கி,மீட்டர் மாநில நெடுஞ்சாலையும், 6 ஆயிரத்து 572 கி.மீட்டர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. மீதியுள்ள 49 ஆயிரத்து 928 கி.மீட்டர் சாலைகள் மாவட்ட, தாலுகா மற்றும் கிராமபுற சாலைகளாகவுள்ளது. மாநிலத்தி–்ல் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் உள்ள மொத்த சாலைகளில் 10 சதவீதம் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

அதை உயர்த்த வேண்டும் என்று மாநில அரசின் சார்பில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை மாதம் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அரசின் கோரிக்கை ஏற்று சில மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதை செயல்படுத்தும் வகையில் யல்லாபுரா-சித்தராபுரா-தாளகுப்பா-பட்கள், பெலகாவி-பாகல்கோட்டை-ரெய்ச்சூர், சிரசி-ஹாவேரி-கூட்லகி-முளக்கல்மூரு, காலபாட்வா-மன்னதவாடி-எச்.கே.கோட்டை-மைசூரு, சிந்தாமணி-செல்லூர்-கணகல், முளகல்மூரு-ராமதுர்கா-ஆனந்தபுரா, துமகூரு-கொரட்டிகெரே-பாவகட-கல்யாணதுர்கா-வேபரல்லா, ராம்நகரம்-சதாசிவகட, தாவணகெரே-சென்னகிரி, சித்ரதுர்கா-செல்லகெரே-பாவகட-பெனகுண்டா, கல்புர்கி-உமர்கா, சங்கேஷ்வர-கோகாக்-யரகட்டி-முனவள்ளி-நரகுந்த.

தடஸ்-கலகடகி-தார்வார்-ஹெபசூரு-நவலகுந்த-அண்ணகெரி, நரகுந்த-பெலவணகி-கஜேந்திரகடா-குஷ்டகி-தாவரகெரே-சிந்தனூரு, கொப்பள்-பெலகட்டி-முண்டரகி-பாகேவாடி-பெலஹட்டி-குடதூரு-ஷிங்காவி, கானாபுரா-ஹளியாள்-யல்லாபுரா, சிருங்கேரி-ஆகலகுந்தி-ஜெயபுரா-பாளேஹொன்னூர்-ஆல்தூர்-நதிபுரா மற்றும் மைசூரு-பண்ணூர்-மளவள்ளி ஆகிய மாநில 18 நெடுஞ்சாலைகள் விரைவில் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. கட்கரி தலைமையில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் கர்நாடக அரசின் கோரிக்கை  குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. அதில் அரசின் கோரிக்கை ஏற்று சில மாநில  நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது


Tags : Karnataka , In the state of Karnataka Order to upgrade 18 State Highways to National Highways
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!