அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி

தங்கவயல்: தங்கவயலில் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பங்காருபேட்டை ரயில்வே காலனியை சேர்ந்தவர் பப்லு மீனா. இவர் மொபைல் போனுக்கு அடிக்கடி தேவையற்ற வங்கிகள் தொடர்பான மெசேஜ்கள் வந்து கொண்டே இருந்ததால், அவற்றை தவிர்க்கும் பொருட்டு மொபைல் கஸ்டமர் கேர் எண் ஒன்றுக்கு போன் செய்து, தன் போனுக்கு வரும் தேவையற்ற மெசேஜ்களை பிளாக் செய்ய கோரினார். அந்த நபர் வேறு ஒரு மொபைல் எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொண்டு பேச கூறி இருக்கிறார்.

எனவே அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, அந்த நபர் உங்கள் மொபைலுக்கு ஒரு செயலியை அனுப்புகிறேன். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தேவையற்ற மெசேஜ்கள்,போன் கால்கள் ஆகியவற்றை பிளாக் செய்து விடும் என்று கூறினார். அதை நம்பி அவர் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்ததும்,  ரூ.9001, ரூ.9001, ரூ.41233, ரூ.9001, ரூ.9001, ரூ.3901 என மொத்தம் ரூ.80 ஆயிரம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. இது குறித்து தங்கவயல் சைபர் கிரைம் போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: