×

சொல்லிட்டாங்க...

* விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் கதவுகள் மூடப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அரசு தெரிவிக்கும். - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

* தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரும் இப்போது இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு போராட்டம் செய்கிறார்கள். இவர்களை ஒரு சில அமைச்சர்கள்தான் துாண்டி விடுகிறார்கள். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

* அத்துமீறல் மற்றும் வன்மத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை உடனடியாக முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் மேலும் தீவிரமாகும் என எச்சரிக்கிறோம். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

* போராடும் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்து, கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முறியடித்துவிடலாம் என்பது அதிமுக அரசின் பகல் கனவாகவே முடியும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...