டெல்லியில் விவசாயிகள் தாக்குதலை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், குடியரசு தினத்தன்று அமைதியான முறையில் டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தவிடாமல் காவல் துறையினர் அராஜக அடக்குமுறையை கண்டித்து நேற்று வேடந்தாங்கலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அச்சிறுப்பாக்கம் வாலிபர் சங்க ஒன்றிய இணை செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.

வாலிபர் சங்க அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் கே.அசோக் கண்டன உரை ஆற்றினர். நிறைவாக ஆர்ப்பாட்டத்தை விளக்கி  மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மு.தமிழ் பாரதி உரையாற்றினார். இதில், வேடந்தாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யூர் வட்ட கிளை சார்பில், சோத்துபாக்கம் மேம்பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி அனைவரையும் வரவேற்றார். இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: