×

தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா

குன்றத்தூர்: தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் மாங்காடு காமாட்சி அம்மன். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 3 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கோவில் வளாகத்தில் உள்ள தெப்ப குளத்தில் நேற்று இரவு முதல் ஆரம்பமானது.

இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மின் விளக்குகள் அலங்காரத்துடன் அம்மன் தெப்பத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முதல் நாளான நேற்று 7 முறை தெப்பம் சுற்றி வந்தது. வழக்கமாக தெப்பத் திருவிழாவின் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது, கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் யாரும் தெப்ப திருவிழா நடக்கும் இடத்தின் அருகில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தெப்ப குளத்தை ஒட்டியுள்ள காம்பவுண்டு சுவர் வழியாக பக்தர்கள் தெப்ப திருவிழாவை பக்தர்கள் கண்டுகளித்தனர். இந்த தெப்பத் திருவிழா நாளை வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெறும்.

Tags : Mangadu Kamatchi Amman Temple Boat Festival ,Thaipusam , Mangadu Kamatchi Amman Temple Boat Festival before Thaipusam
× RELATED தைப்பூச விழா சென்னிமலை கோயில் தேர் நிலை சேர்ந்தது