×

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பொது பேரவை கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 854 சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 106-வது பொது பேரவை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பேரவை கூட்டத்தில் வங்கியின் தலைவர் வாலாஜாபாத் பா.கனேசன் பேசுகையில், 2019-20 நிதியாண்டியில் பயிர் கடன் திட்டத்தில் 49 ஆயிரத்தி 10 விவசாயிகளுக்கு ரூ. 342.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல 28 ஆயிரத்தி 328 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ. 194.94 கோடி பயிர் கடனாக வழங்கி, நடப்பாண்டில் வங்கி 23.43 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி, மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், இணைப் பதிவாளர் ,பொது மேலாளர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள 854 சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாக குழு இயக்குநர்கள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Kanchipuram Central Cooperative Bank ,General Assembly Meeting , Kanchipuram Central Cooperative Bank General Assembly Meeting
× RELATED களஞ்சியம் பொதுக்குழு கூட்டம்