பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு

காஞ்சிபுரம்: வட்ட ரயில் சேவை தொடர்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸிடம் காஞ்சிபுரம்  எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை மனு அளித்தார். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் ரயில்வே கேட் பராமரிப்பு குறித்தும் அடிப்படை வசதிகள் உள்ளதா ரயில் நிலையம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து, கழிவறை, ஊழியர்களின் ஓய்வறைகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உடனிருந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் இடம் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் கட்டிமுடிக்கப்படாமலிருக்கும் சாலை மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும், காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு புதிய ரயில் சேவையை துவக்கவும்,மகளிர் பயணம் செய்ய கூடுதல் பெட்டியை ஒதுக்கீடு செய்யவும்,பழைய காஞ்சிபுரம் ரயில் நிலையத்தை தொண்மை வாய்ந்த ரயில் நிலையமாக அறிவிக்கக் கோரியும், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இரு ரயில் நிலையங்களிலும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தவும் காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே புதிய ரயில்வே நிலையம் அமைக்கவும், வையாவூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள ரயில்வே கேட்டை அகலபடுத்தவும் மற்றும் பல கோரிக்கைகளை முன் வைத்தார். அப்போது, காஞ்சிபுரம் ஸ்டேஷன் மாஸ்டர் புருஷோத்தமன் காஞ்சிபுரம் - சென்னை ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர். ஜெ. ரங்கநாதன், இணை செயலாளர்கள். கார்த்திக் மற்றும் சென்னை ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் தமிழ்ச்செல்வன் ,கிஷோர்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>