×

அதிமுக.வை மீட்பதே தாரக மந்திரம்: டிடிவி தினகரன் உறுதி

சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு வந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா வார்டில் இருப்பதால் சசிகலாவை பார்க்க முடியவில்லை. அவருடைய விடுதலை எங்களுக்கும், அமமுக தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி. சசிகலாவின் உடல்நிலை நன்றாக உள்ளது, கொரோனா விதிமுறைப்படி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது, டிஸ்ஜார்ஜ் செய்வது மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்கும். டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதும், அமோக வரவேற்புடன் சசிகலாவை சென்னைக்கு அழைத்து செல்ல இருக்கிறோம். தற்போது, அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. இருப்பினும், உண்மையான அதிமுக.வை மீட்கும் முயற்சியே எங்கள் தாரக மந்திரமாக இருக்கும். அதில் இருந்து பின்வாங்க போவதில்லை,’’ என்றார். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து கேட்கப்பட்டதற்கு, ‘‘சசிகலாவின் விடுதலையை அதிமுக.வினரும் கொண்டாடுவதாகவே நான் கருதுகிறேன்,’’ என்றார்.

Tags : AIADMK ,DTV Dinakaran , Redemption of AIADMK is the quality mantra: DTV Dinakaran confirms
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் 25ம் தேதி...