×

31ம் தேதிக்குள் உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால் பொதுக்குழுவில் கூட்டணி முடிவு: ராமதாஸ் அதிரடி

சென்னை: பாமக நிறுவவனர் ராமதாஸ் காணொலி மூலம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலின்போது, பாமக, அதிமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான கோரிக்கை மனுக்களை அதிமுக அரசிடம் வழங்கினோம். அதன் பின்பு என்னுடைய தலைமையில் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிடோர் முதல்வர் பழனிசாமியை மீண்டும் சந்தித்து, கோரிக்கை வைத்தோம். சொல்வதை காதுகொடுத்து கேட்டார். ஆனால்,
இந்நிலையில், ஒரு நாள் 2 அமைச்சர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. பிறகு, மீண்டும் 2 அமைச்சர்கள் வந்து பார்த்தார்கள். பொங்கல் பண்டிகைக்கு முன், வன்னியர் இடஒதுக்கீடு பிரச்னை தீர்க்கப்படும் என்றார்கள்.

வரவே இல்லை. பிறகு, வன்னியர் இடஒதுக்கீட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் எதிர்ப்பதாக கூறினார்கள். அதனால், அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோர் அவரை சந்தித்து, விளக்கினார்கள். அவர், இடஒதுக்கீடு வழங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்து விட்டார். முதல்வர் பழனிசாமியிடமும் விளக்கம் அளித்தோம். முதல்வர் எல்லாவற்றுக்கும் மவுனமாகவே இருக்கிறார். பிறகு ஒன்றிரண்டு அமைச்சர்கள் எதிர்ப்பதாக கூறுகிறார்கள். தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரும் இப்போது இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு போராட்டம் செய்கிறார்கள். இவர்களை ஒரு சில அமைச்சர்கள்தான் துாண்டி விடுகிறார்நீண்ட காலமாகவே இந்த கோரிக்கையை நாங்கள் வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் தான், 25ம் தேதி நிர்வாகக் குழுவை கூட்டி முடிவெடுக்க இருந்தோம். இந்த காலகட்டத்தில் பிரச்னையை தீர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்த்து, நிர்வாகக்குழு கூட்டத்தை 31ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறோம். வரும் 31ம்தேதிக்குள் தமிழக அரசு நல்ல  முடிவை அறிவிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் 31ம்தேதி நடைபெற உள்ள பாமக நிர்வாக குழுவில் விவாதித்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவோம். அப்படியும் தமிழக அரசு முடிவெடுக்காவிட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, கூட்டணி நிலைபாடு குறித்த முடிவை அறிவிப்போம்.

Tags : General Assembly , Coalition decision in the General Assembly if the allocation is not made by the 31st: Ramadas Action
× RELATED உள் ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு