கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லி: சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல், பஸ் டெப்போ அருகில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயம்  உள்ளது. கடந்த சில மாதங்களாக கோயிலை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடந்துவந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 25ம் தேதி மகா கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எடுத்துவரப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தின் மேல் உள்ள  கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. போரூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பரணிபுத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: