மதிமுக அறிவிப்பு: கட்சி வளர்ச்சி நிதிக்காக வைகோ சுற்றுப்பயணம்

சென்னை: மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:  பிப்ரவரி 12ம் தேதி மாலை 3 மணி முதல் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி, நெல்லை மத்தியம், நெல்லை புறநகர், கன்னியாகுமரி, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு ஆகிய பகுதியிலும், 13ம் தேதி காலை 10 மணி முதல் சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் பகுதி, அன்று மாலை 4 மணிக்கு திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, திருச்சி புறநகர் வடக்கு, அரியலூர், கரூர், புதுக்கோட்டை பகுதியிலும், 14ம் தேதி காலை 10 மணி முதல் தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதியிலும், 15ம் தேதி காலை 10 மணி முதல் கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் புறநகர், திருப்பூர் மாநகர் பகுதி.

அன்று மாலை 4 மணிக்கு நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய பகுதியிலும், 16ம் தேதி காலை 10 மணி முதல் சேலம் மத்தியம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதி அன்று மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும், 17ம் தேதி காலை 10 மணி முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு வடக்கு, திருவள்ளூர் பகுதி. அன்று மாலை 4 மணிக்கு சென்னை, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, தென்சென்னை கிழக்கு, தென்சென்னை மேற்கு ஆகிய பகுதிகளிலும் சுற்றுப்பயணம் நடைபெறும். அதேபோல், 18ம் தேதி காலை 10 மணி முதல் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும்.

Related Stories: