சின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி ஜரூர்

சின்னமனூர்: சின்னமனூர் போடி மாநில நெடுஞ்சாலையில் மார்க்கையன் கோட்டையில் போடி பி ரிவு, குச்சனூர் பிரிவுகள் உள்ளது. மார்க்கையன் கோட்டையிலிருந்து வெளியேறும் ஒட்டு மொத்த கழிவுநீர் சாக்கடை வாயிலாக கடந்து இரு பிரிவுகளில் சேர்ந்து குச்சனூர் சாலையில் கடக்கும். இங்கு பாலம் இல்லாததால் குறுகிய சாக்கடையால் எப்போதும் கழிவுநீர் குளமாகவே தேங்கி நிற்க்கும். தொற்றுகள் உள்பட பெரும் பாதிப்புகளால் கடந்த வருடத்தில் முக்கோண வடிவில் பாலம் கட்டப்பட்டது. அதன்பிற்கும் சாக்கடை கழிவுநீர் சுத்தமாகவே கடக்காமல் குளமாக நிற்கும் நிலையே தொடர்ந்தது.

மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கவனமின்றி போடப்பட்ட புது பாலத்தால் எந்த பயனும் இல்லாமல் போனதால், தொற்றுகளே பேரூர் மக்களை சுற்றி வலம் வந்து கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வந்தது. மக்களின் தொடர் புகார்களுக்கு பிறகு கட்டிய புதிய பாலத்தை இடித்து விட்டு ஆழமான நீளமான பாலம் கட்டி சரி செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கவனக்குறைவாக கட்டிய பாலம் இடித்து அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதற்காக போடி அய்யம்பட்டி, புலிக்குத்தி உள்பட போடி மார்க்கம் செல்ல மார்க்கையன் கோட்டை அக்ரஹார குறுகிய தெருவில் மாற்றி விடப்பட்டுள்ளதால் ஓட்டுநர்கள் கடக்க முடியாமல் தட்டு தடுமாறி கடந்து வருகின்றனர்.

பொது மக்கள் கூறுகையில், புதிய பாலம் கட்டும்போதே கவனமாக ஆய்வு செய்து கழிவுநீர் கடப்பதை போல் செய்திருந்தால் புதிய பாலம் கட்டும் பணிக்கு ரெட்டிப்பு செலவு ஏற்பட்டிருக்காது. பொது மக்களின் வரிப்பணம் தேவை இல்லாமலும், கமிஷனுக்காகவும் வீணடிக்கப்படுகிறது என்றனர்.

Related Stories: