ஹலோ பிரெசிடெண்ட்!

கடந்த வாரம் முழுக்க ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டவர் ஜோ பைடன். அமெரிக்காவின் புதிய அதிபர். மீடியாக்களின் லைம்லைட் வெளிச்சத்தில் குளித்துக்கொண்டிருப்பவர் தன்னைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் எளிமையாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ‘இதுதான் நான்’ என்று அவரைப் பற்றி அவரே எழுதியிருக்கும் பதினோரு குறிப்புகள் :

    ஜோ பைடன் பென்சில்வேனியாவில் 1942ம் ஆண்டு பிறந்தவர்.

    1988 மற்றும் 2008 இரண்டு முறை அதிபர் பதவிக்குப் போட்டியிட்டவர்.

    பைடன் 1960களில் கால்பந்து விளையாடிய நாட்களில் அவர் அணி வெல்ல இயலாததாய் இருந்தது.

    பைடனுக்கு சிறுவயதில் திக்குவாய் இருந்தது. அதைப் போக்க யீட்ஸின் கவிதைகளை உரக்கச் சொல்வாராம்.

    சேம்ப் மற்றும் மேஜர் என இரண்டு ஜெர்மன் செப்பர்டு வகை நாய்களை வளர்த்துவருகிறார்.

    அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வயது உறுப்பினரும் இவர்தான். அமெரிக்காவின் முதிய அதிபரும் இவர்தான்.

    1972ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் இவர் மனைவி நெய்லியா மற்றும் மகள் ஏமி ஆகியோரை இழந்துவிட்டார். இவ்விபத்தில் மகன்கள் பியூ மற்றும் ஹண்ட்டர் ஆகியோரும் படுகாயமுற்றனர்.

    மருத்துவமனையில் மனைவியும் மகளும் இறந்த நிலையில் மகன்களின் அருகே இருந்தபடிதான் தனது செனட்டர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

    ஜான் கென்னடிக்குப் பிறகான இரண்டாவது கத்தோலிக்க மதப் பிரிவைச் சேர்ந்த அதிபர் இவர்தான்.

    பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்புச் சட்டத்தை பைடன்தான் எழுதினார்.

    ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் சாக்லேட் சிப் ஃபேவரைட்.

Related Stories:

>