பள்ளி மட்டுமே போதுமா?

குழந்தைக்கு இரண்டரை வயது ஆனதுமே பிளேஸ்கூல். பிறகு ப்ரீ கேஜி. அதன் பிறகு முதலாம் வகுப்பு என்று தொடங்கும் பள்ளிக் கல்விப் பயணம் 17 வயதில் +2 வரை தொடரும்.“ஒரு குழந்தை முழுமையான அறிவைப் பெற பள்ளி மட்டுமே போதாது. அந்தந்தக் குழந்தையின் தனித்திறன் வெளிப்பட பள்ளியைத் தாண்டிய பயிற்சிகள் அவசியம்” என்கிறார்கள் குவெஸ்ட் நிறுவனத்தின் இணைநிறுவனர்களான ஸ்ரீகாந்த் மற்றும் சரண்யா.‘‘சில பள்ளியில் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி என்று கராத்தே, ஸ்கேட்டிங், செஸ், பாட்டு, பரதம், வெஸ்டர்ன் டான்ஸ் என்று ஒரு மணி நேரம் ஈடுபடச் செய்கிறார்கள். ஆனால், இதுவும் அவர்கள் ஐந்தாம் வகுப்போ அல்லது எட்டாம் வகுப்பு படிக்கும் வரை தான் இருக்கும். அதற்கு பின் அவர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களும் தடைப்பட்டு போய்விடும்.

பள்ளிப்படிப்பை தாண்டி குழந்தைகளுக்கு பிடித்த திறன்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் எங்கள் நிறுவனம். முதலில் வார இறுதி நாட்

களில் ஒர்க்‌ஷாப் போலதான் ஆரம்பித்தோம். அதில் பல வகையான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உதாரணத்திற்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி ஒரு பக்கம் நடக்கும், மறுபக்கம் அந்த பொம்மைகளை எவ்வாறு வடிவமைக்கலாம் என்று சொல்லித் தரப்படும். பேக்கிங், மெஹந்தி போடுவது, நெசவு செய்வது என பலதரப்பட்ட செயல்பாடுகளும் அதில் இருந்தது. இதன் மூலம் பயிற்சி பெறும் குழந்தைக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். பெற்றோரும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஒரு ெதாலைநோக்குப் பார்வையோடு திட்டமிட முடியும்.

ஒர்க்‌ஷாப் நல்லபடியாக போனதால் ‘ஆப்டர் ஸ்கூல்’ பயிற்சியினை ஆரம்பித்தோம். வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல், பள்ளி நேரம் முடிந்து பயற்சியினை எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு லாக்டவுன் வந்ததால், ஆன்லைனில் இதனை தொடர்ந்தோம். அதாவது, இப்ேபாது ஒரு குழந்தை  ஓரிகாமி குறித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது குறித்து ஒரு லிங்கினை அவர்களின் செல்போனுக்கு அனுப்பிவிடுவோம். அதில் ஓரிகாமி குறித்து பல லெவல்கள் இருக்கும். ஒவ்ெவாரு லெவலாக அவர்கள் கிளிக் செய்து எவ்வாறு செய்யலாம் என்று கற்றுக்கொள்ள முடியும்’’ என்ற சரண்யாவைத் தொடர்ந்தார் ஸ்ரீகாந்த்.

‘‘அடுத்த கட்டமாக அகாடெமிக் ஸ்கில்ஸ் குறித்து ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். படிப்பு மற்றும் தனித்திறன் இரண்டையும் தனித்தனியாக பார்க்காமல் இரண்டையும் சேர்த்து தேர்வு செய்யலாம். இந்த பயிற்சி காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை முழு நேரமாக இயங்கும். மாணவர்கள் பிடிச்ச விஷயங்களை தேர்வு செய்து அதைச் சார்ந்து படிக்கலாம்.இதில் ஒரு குழந்தைக்கு பெசிலிடேட்டர் மற்றும் ஒரு மென்டர் இருப்பார்கள். அவர்கள் அந்த குழந்தைக்கு விரும்பியதை சொல்லித் தருவது மட்டுமில்லாமல், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிகாட்டியாகவும் இருப்பாங்க. இது போல் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்பும் குழந்தைகள் என்.ஐ.ஓ.எஸ் சில் பதிவு செய்து அதில் தேர்வுகளை எழுதி தங்களின் பள்ளிப் படிப்பையும் தொடரலாம். இவ்வாறு படிக்க சட்டப்படி அனுமதி இருப்பதால், குழந்தைகள் சிறு வயதில் இருந்தே தங்களின் தனித்திறமையினை வளர்த்துக் கொள்ள நாங்க ஒரு பாதை அமைத்துத் தருகிறோம். இது வழக்கமான பள்ளிக்கு மாறுபட்ட விதம் என்று சொல்லலாம்’’ என்றவர் இது குறித்து மேலும் விவரித்தார்.

‘‘நிறையக் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் என்ன படிக்கப் போகிறோம் என்று தெரியாது. டாக்டர், என்ஜினியர் அல்லது கலைக் கல்லூரிகளில் பட்டதாரி. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கே கூட இவ்வளவுதான் தெரிகிறது. எங்கள் நிறுவனம் மூலம் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு விருப்பப்பட்ட துறை குறித்த பயிற்சியும், படிப்பும் எடுத்துக் கொள்வார்கள். இதற்கு சிறப்புப் பயிற்சியாளர்கள் மற்றும் டிஜிட்டில் முறையில் பாடங்கள் எடுப்போம். +2 முடித்தவுடன் எதிர்கால கேரியர் என்னவாக இருக்கவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்க இந்த பயிற்சி வழிவகுக்கும்.

தனியார் முறையில் தேர்வு எழுதவும் நாங்க உதவி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் தனித்திறனை வளர்த்துக்கொள்ள ஒரு சூழ்நிலையினை அமைத்து தருவது தான் எங்களின் முக்கிய பணி. அதன்பின் மாணவரின் விருப்பம் பொறுத்து அவர்கள் ரெகுலர் பள்ளிப் பாடத்தையும் தேர்வு செய்யலாம். அல்லது பிரைவேட் முறையில் பள்ளித் தேர்வினை எழுதி தங்களுக்கு விருப்பமான துறையில் மாஸ்டராகலாம். இந்த பயிற்சி மூலம் அவர்கள் வாழ்க்கையில் எந்த வித சூழ்நிலையையும் எதிர்கொண்டு அதை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்’’ என்றார் ஸ்ரீராம்.

‘வழக்கமான பள்ளியில் படித்துக் கொண்டு, மாலையில் பயிற்சி எடுக்கலாம். வார இறுதி நாட்களிலும் பயற்சி எடுக்கலாம். அல்லது முழு நேரமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் அனைத்துமே குழந்தைகளின் விருப்பம்தான். நாங்க கட்டாயப்படுத்துவதில்லை. இப்போது 150 குழந்தைகளை இதில் இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். மேலும் பள்ளிகளிலும் சிறப்புப் பயிற்சி அளிக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார் சரண்யா.

Related Stories:

>