×

முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது 14 வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: 14-வது ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 57 வீரர்களை அணிகள் விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் முதல் முறையாக ஐபிஎல் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது.
2008 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் நடந்து வரும் ஐபிஎல் திருவிழா, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய வீரா்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு கடந்த 20-ஆம் தேதியோடு முடிவடைந்தது. புதிய வீரா்களை தோ்வு செய்யும் விதமாக 8 அணிகளும் தங்கள் வசமிருந்த வீரா்கள் பலரை விடுவித்துள்ளன. சிஎஸ்கே அணியிலிருந்து முரளி விஜய், கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அது தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் ஏலம் சென்னையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்திற்கு தயாராகும் வகையில், ஐபிஎல் அணிகள் ஏற்கனவே தங்கள் அணிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீரர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுமா அல்லது வெளிநாட்டில் நடைபெறுமா என்பதே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியோ, ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக தொடா்ந்து கூறியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. அந்தத் தொடா் சுமுகமாக முடிவடையும்பட்சத்தில், ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான வழி ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags : Player auction ,IPL ,Chennai ,announcement , Player auction for 14th IPL series to be held in Chennai for the first time ..! Official announcement
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...