ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்...! நினைவிட திறப்பு விழாவில் ஓபிஎஸ் பேட்டி

சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு கடமை பட்டிருப்பதாக தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘கனத்த இதயத்தோடும் கண்ணீர் வழியும் விழிகளோடும் உங்கள் முன் நிற்கிறோம்.

அம்மா அவர்களுக்கு இந்த பிறவி அல்ல; ஏழேழு பிறவி எடுத்தாலும் அவருக்கு தீராத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம். அவர் வகுத்த திட்டங்களால் பயனடைந்த மக்கள், நன்றியை ஒரு போதும் மறக்க மாட்டர்கள். அதனால் தான் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அருகிலேயே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைத்திருக்கிறோம்’ என்று கூறினார். தொடர்ந்து, இது சாதாரண நினைவிடம் அல்ல; அம்மா அவர்களின் நினைவலைகள். அம்மா அவர்களுக்கு விசுவாசத் தொண்டர்கள் ஆகிய நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருந்தோம். அது தான் இன்று நினைவிடமாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: