4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா...! பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து சசிகலா விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் வழங்கியுள்ளனர்.   பிப்ரவரி 3-ம் தேதி அல்லது அதற்கு பிறகு சசிகலா சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட ரூ 10 கோடியையும் அவர் செலுத்திவிட்டார்.

இந்த நிலையில் இன்று விடுதலையாவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்படும் என தெரிகிறது. சிறை நிர்வாகம் இதனிடையே அவர் கடந்த 20-ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது விடுதலையில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் என சிறை துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையானார்.

சசிகலாவிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களை மருத்துவமனையில் சிறைத்துறை ஒப்படைத்தது. சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையில் டிடிவிதினகரன், வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் உள்ளனர். முன்னதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் லதா தலைமையிலான குழு மருத்துவமனைக்கு சென்று ஆவணங்களில் சசிகலாவின் கையொப்பம் பெற்று பின் அதற்கான நகலை மருத்துவமனை நிர்வாகத்திடமும் அளித்தனர்.  சிறை தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்டாலும் பிப்ரவரி 3ந் தேதி சென்னை திரும்ப சசிகலா திட்டம் என தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories: