×

தங்கவயலில் புதிய விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா: எம்எல்ஏ ரூபாசசிதர் பெருமிதம்

தங்கவயல்:தங்கவயலில் விளையாட்டு ஆர்வம் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி பெற உதவும் வகையில் புதிய விளையாட்டு அரங்கம் குடியரசு தின நாளில் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எம்எல்ஏ ரூபகலா சசிதர் கூறினார். தங்கவயல் நகரசபை சார்பில் விளையாட்டு அரங்கமாக புனரமைக்கப்பட்ட நகரசபை மைதானத்தில் 72வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை 9 மணியளவில் தங்கவயல் மாவட்ட போலீஸ் எஸ் பி.இலக்கியா கருணாகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய தொகுதி எம்எல்ஏ ரூபகலா சசிதர், மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு குடியரசு எனப்படுகிறது.

ஏற்ற தாழ்வற்ற சமூகத்திற்காக பாடுபட்ட டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட நாள் தான் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். தங்கவயல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு ஆர்வம் மிகுந்தவர்கள். அவர்கள் பயிற்சி பெற உதவும் வகையில் அடிப்படை வசதிகள் கொண்ட ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பதே கனவு திட்டம். அதை நிறைவேற்றி தர தனியார் நிறுவனம் முன் வந்தது.  ஐந்து கோடி செலவில், காலதாமதம் ஏற்பட்டாலும் சிறப்பான முறையில் இந்த விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. இன்று அதில் குடியரசு தின விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். மேலும் அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கான வார்டுகள் எட்டு கோடி செலவில் கட்டப்பட்டு வருவது உள்பட பல் வேறு மேம்பாட்டு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.  தங்கவயல் மாவட்ட போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை.


Tags : Goldfields ,Republic Day Celebration ,New Stadium ,MLA Rupasasidhar , Republic Day Celebration at New Stadium in Goldfields: MLA Rupasasidhar proud
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு