வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் தலையிட்டும் தீர்வு காண முடியவில்லை: மாஜி பிரதமர் தேவகவுடா கவலை

பெங்களூரு: வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்ட விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையீட்டும் தீர்வு ஏற்படுத்த முடியவில்ைல என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்தார்.  பெங்களூருவில் அமைந்துள்ள மஜத தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட எச்.டி.தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``நான் பிரதமராக இருந்த நேரத்தில் எந்த போராட்டாத்துக்கும் அவகாசம் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அதிகாரத்தில் இல்லை. எந்த ஆலோசனையும் வழங்க முடியவில்லை.   வேளாண் சட்டம் மக்களவை கூட்டத்தில் தாக்கல் செய்த நேரத்தில் நானும் அங்கிருந்தேன். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை 2-3 மாதங்கள் தள்ளிவைத்து கூட்டு குழு அமைத்து அதற்கு பின் மசோதாவை தாக்க செய்து இருக்க வேண்டும் என்றேன். ஆனால் மத்திய அரசு அதை பரிசீலனை செய்யவில்லை.

அன்றே இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மக்களவையில் அவர்களுக்கு தனிபெரும்பான்மை இருந்தது. ஆனால் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் இரவு 10 மணிக்கு மேல் மசோதா தாக்கல் செய்து அங்கீகாரம் பெற முயற்சித்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமானம். வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் தலையீட்டும் தீர்வு ஏற்படுத்த முடியவில்ைல.

 இதனால் விவசாயிகள் குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். நாட்டில் அனைத்து பிரச்னைகளுக்கும் இணைந்து பேசி தீர்த்து கொள்ள முடியும், ஆனால் தற்போது அந்த சூழ்நிலை நாட்டில் இல்லை. இதனால் அனைத்திற்கும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எச்.டி.குமாரசாமி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் பெங்களூருவில் பெரிய அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

முதல்வருடன் ஆலோசனை

ஹாசன் மாவட்டத்துக்கு நிதி ஒதுக்குவது விஷயமாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த பின்னர் போராட்டம் நடத்துவது சரியில்லை என்று கைவிடப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இது குறித்து ராஜ்யசபா கூட்டத்தில் குரல் எழுப்பப்படும் என்று தேகவுடா கூறினார்.

Related Stories: