குடியரசு தினவிழா முதல்வர் வாழ்த்து

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு விவசாயிகள், கொரோனா போராளிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாக கூறியுள்ள முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு ஆண்டில் குடியரசு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பலத்தை பல்வேறு தருணங்களில் பார்க்க முடிந்தது. டாக்டர்கள், நர்ஸ்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றியதை நாம் அனைவரும் பார்த்தோம். துப்புரவு பணியாளர்கள் சுகாதாரத்தை மேம்படுத்தியதை பார்த்தோம். தீரமான ராணுவ வீரர்கள் நமது நாட்டை காத்தனர். மனித இனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தொற்றுநோய்களுக்கு மத்தியில் இந்த மாபெரும் குடியரசின் மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் போராளிகளின் அர்ப்பணிப்பு பணியை கடந்த ஒருவருடமாக நாம் கண்டோம். கடினமான நேரத்தில் தங்கள் பணியை திறம்படி செய்த உண்மையான பணியாளர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் மரியாதை செலுத்துகிறது. புதிய நம்பிக்கையுடனும், கனவுகளுடனும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாட்டின் 72வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>