×

திருவொற்றியூர் பாதைக்கு வள்ளலார் பெயர் முதல்வரிடம் நடிகர் விவேக் கோரிக்கை

சென்னை:  நடிகர் விவேக், சென்னையிலுள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அரசியலுக்காகவோ அல்லது என் சொந்த காரணத்துக்காகவோ முதல்வரை சந்திக்கவில்லை. தமிழ்த்துறவி, அருட்பா தந்த வள்ளலார், தன் வாழ்க்கையில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதைக்கு, வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். விரைவில் நல்ல செய்தி வரும்’ என்றார்.

Tags : Vivek ,road ,Vallalar ,name chief ,Tiruvottiyur , Actor Vivek requests Vallalar name chief for Tiruvottiyur road
× RELATED விவேக் ஓபராய்க்கு போலீஸ் அபராதம்