×

தமிழக அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி

சென்னை: கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது என அறிவித்துள்ள தமிழக அரசு,  யாருக்கு பயப்படுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: கிராம  சபைக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.  கோவிட் காரணம் காட்டியிருக்கிறது. குடியரசு நாள் கொண்டாடலாம், ஜெயலலிதா  விழா நடத்தலாம், கிராம சபை மட்டும் கூடாதா. உண்மையில் இந்த அரசு யாருக்கு  பயப்படுகிறது என்று கேட்டுள்ளார்.

Tags : government ,Tamil Nadu , Who is the government of Tamil Nadu afraid of? Kamal question
× RELATED 'தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய...