×

சொல்லிட்டாங்க...

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்   என்று பிரதமர் பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கி   விடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு வர பிரதமர் மோடி தயாராக இல்லை. இதற்கு கூட்டணி பேரம் படியவில்லை.   - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க மத்திய பாஜ அரசு, கவர்னர் கிரண்பேடியை பயன்படுத்துகிறது. பாஜ ஆளாத மாநிலங்களில், கவர்னர் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.  - மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.

சசிகலா தன்னை முதல்வராக்கவில்லை. எம்எல்ஏக்கள் தன்னை முதல்வராக ஆக்கியுள்ளனர் என்று முதல்வர் கூறிவருகிறார். கூவத்தூரில் நடந்தது அனைவருக்கும் தெரியும்.  - முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்.

Tags : If the Prime Minister insists that my favorite rabbit has three legs and thinks that he can oppress the farmers through repression, the opposite will happen. - Madhimuga General Secretary Vaiko
× RELATED மகளிர் உரிமைகளுக்காக அயராது உழைப்போம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சூளுரை