×

234 தொகுதியிலும் தனித்துப்போட்டி: சீமான்

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே நாம் தமிழர் கட்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்  நேற்று நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும். எனவே நாம்தான் பெரிய கட்சி. மத்திய அரசு விவசாயிகளுக்கு முதலில் கண்ணீரை வரவழைத்தது. தற்போது டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை வீசுகிறது. இச்செயல் கண்ணீரை வரவழைக்கிறது. சசிகலா பூர்ண குணமடைந்து உடல் நலத்துடன் வரவேண்டும். என்பது எனது தனிப்பட்ட விருப்பம். விடுதலையாகி அவரின் செயல்பாடுகளை பொறுத்து அரசியல் மாற்றம் இருக்கும், என்றார். 


Tags : Seaman , 234 Volleyball Singles: Seaman
× RELATED 6,116 ஏக்கர் நிலம் அதானிக்கு தாரைவார்ப்பு: சீமான் குற்றச்சாட்டு