×

பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 72 வது குடியரசு தின விழா நேற்று நடைப்பெற்றது. இந்த விழாவில்  ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட கிராமங்களில் கொரோனா, நிவர் மற்றும் புரெவிப் புயல்கள் போன்ற பேரிடர் காலங்களில். கிராமப்புறங்களில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர், பிடிஓக்கள், ஊராட்சி செயலர்கள், நீர்த்தேக்கத்தொட்டி ஆப்ரேட்டர்கள் என மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், சீனுவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியின் போது அரசுதுறை அலுவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  Tags : disaster , Certificate for outstanding service during a disaster
× RELATED சமூக சேவையில் புதிய சிறகுகள் அறக்கட்டளை