வீரவணக்க நாள் கூட்டம்

மதுராந்தகம்:மதுராந்தகம் நகர திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தேரடி தெருவில் நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் கே.குமார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன், சத்தியசாய், கண்ணன், விஜயகணபதி, உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ப.தாயகம்கவி எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மதுராந்தகம் மற்றும் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.புகழேந்தி, ஆர்.டி.அரசு ஆகியோர் வீரவணக்க சிறப்புரை ஆற்றினர்.  மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, தலைமை செயற்குழு உறுப்பினர் விசுவநாதன், சித்தாமூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏழுமலை, சிற்றரசு, நகர துணை செயலாளர் சிவலிங்கம், நகர துணை செயலாளர் மூர்த்தி நன்றியுரையாற்றினார். இதில், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>