வருகிற சட்டமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் 3வது அணி என்பது சாத்தியமில்லை: சேலத்தில் முத்தரசன் பேட்டி

சேலம்: குடியரசு தின விழாவையொட்டி, சேலம் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் முன்பு, மாநில செயலாளர் முத்தரசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்த்து கொள்ள மாட்டோம் என்று கூறியதால், மக்களுக்கு மட்டுமில்லாமல் எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்ப்பேன் என தெரிவித்தது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 3வது அணி என்பது சாத்தியமில்லை. கேரளாவைப் போல், தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பது முக்கியமில்லை. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற எண்ணம் தான் பிரதானமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>