ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மன்னன்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். டெய்லர். இவரது வீட்டு புதுமனை புகுவிழா இன்று நடைபெற  இருந்தது. இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் இவரின், தங்கை மகாலட்சுமி. கணவர் கமல்தாஸ் மற்றும் மகன் மோனிஷ்குமார் (10)  குடும்பத்துடன் விழாவிற்கு வந்திருந்தனர். வேடபாளையத்தில் உள்ள ஏரியில் நேற்று மாலை மோனிஷ்குமார் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். ஏரியில் நண்பர்களுடன் மோனிஷ்குமார் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.  உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.  

Related Stories:

>