×

அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி ஓய்வூதியம் பெற 11 ஆண்டாக அலைக்கழிப்பு: ஆட்சியரிடம் மனு

விழுப்புரம்:  அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சுப்பிரமணியன். இவரது 2வது மனைவி விழுப்புரத்தை சேர்ந்த கமலம் (69). இவர் நேற்று முன்தினம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1983ல் என் கணவர் சுப்பிரமணியனின் முதல் மனைவி வேளாங்கண்ணி இறந்துவிட்டார். இதையடுத்து என்னை 1984ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது நான் வறுமையில் தவித்து வருகிறேன். என் கணவர் பெற்று வந்த குடும்ப ஓய்வூதியம் எனக்கு கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில்  முதல் மனைவி மகன் வேல்முருகன் அவதூறாக பழி சுமத்தி வருகிறார். எனக்கும், சுப்பிரமணியனுக்கும் நடைபெற்ற திருமண புகைப்படம், அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைஉள்ளது. எனக்கு வாரிசு இல்லாததால் வாழவே மிகவும் சிரமப்படுகிறேன். எனவே 11 ஆண்டாக அலைக்கழிக்கப்பட்டு வரும் எனக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,Collector , Wife of AIADMK ex-minister 11 years to retire: Petition to Collector
× RELATED அதிமுக- தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி