விவசாயிகளிடம் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க ஸ்டாலின் வலியுறுத்தல்

கோவை: கோவை விமான நிலையத்தில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி போராட்டம் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை கொடுத்து உள்ளேன். உடனடியாக மத்திய பா.ஜ. அரசு எந்தவித நிபந்தனையும் இன்றி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். வேளாண் சட்டங்கள் நிறைவேற மாநிலங்களவையில் அ.தி.மு.க. அரசு காரணமாக இருந்தது. ஆனால் இதை நியாயப்படுத்தி, முதல்வர் பேசி வருவதோடு. போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறார். எனவே விவசாயிகளிடம் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார

Related Stories:

>