புதுச்சேரி முதல்வர் மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: லோக் ஆயுக்தாவை கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி அமல்படுத்த வலியுறுத்தி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இல்லம் முன் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸார் குணசேகரன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட முதல்வர்  உள்ளிட்டோர் மீதும்  வழக்குப்பதிவு செய்ய  கோரி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு பொறுப்பு வகித்து வரும் புதுச்சேரி முதல்வருக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் இருந்தாலும்,  இந்த வழக்கு அரசியல் நோக்கோடு தொடரப்பட்டுள்ளதால், வழக்கில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றனர்.

Related Stories:

>