×

வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை:வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று மாலை,திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர் - ஈச்சனாரியில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.சி.பழனிசாமி அவர்களின் மகன் செல்வன். ஸ்ரீகார்த்திக் பழனிசாமி - செல்வி. ஸ்நேஹா மஹாலட்சுமி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

முன்னதாக, கோவை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் திரு. மருதமலை சேனாதிபதி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், திரு. ஜெகதீசன் அவர்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தி.மு.கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர்கள் திரு. எஸ்.ஏ.காதர், திரு. கார்த்திகேயன், வட்டச் செயலாளர் திரு. மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் மத்திய பா.ஜ.க. அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி ரத்து செய்ய வேண்டும். இந்த வேளாண் சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அ.தி.மு.க. காரணமாக இருந்தது என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். இந்நிலையில், அதனை நியாயப்படுத்தி முதலமைச்சர் திரு. பழனிசாமியும் அ.தி.மு.க.வினரும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதையும் கடந்து, போராடக்கூடிய விவசாயிகளைக் கொச்சைப்படுத்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள், தமிழக மக்களிடத்திலும் இந்திய அளவில் உள்ள விவசாயிகளிடத்திலும் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என கூறினார்.Tags : Palanisamy ,interview ,MK Stalin , Chief Minister Palanisamy should apologize to farmers for passing agricultural laws: MK Stalin
× RELATED மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு...