நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...

நைஜீரியா நாட்டின் தென்மேற்கு நகரமான இகுன்போவில் நாயிடம் பூனைக் குட்டி ஒன்று பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக நாயும், பூனையும் விலங்கினத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் வெவ்வெறு தன்மையை, உணர்வை கொண்டவையாகும். இப்படி மாறுபட்ட இரு விலங்கினங்கள் ஒன்றிணைந்து காட்சி தருவது அசாதாரண நிகழ்வாகும்.

சாலையில் படுத்து தூங்கும் அந்த நாயிடம் பசித்திருக்கும் பூனைக்குட்டி தன்னை மறந்து பால் குடிக்கும் காட்சி அங்கிருந்த நபரால் படம் பிடிக்கப்பட்டு வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories:

>