கேரளாவில் 39.70% கொரோனா நோயாளிகள்: இந்தியாவில் முதலிடம்

திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 39.70 சதவீதம் பேர் கேரளாவில் உள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 64.71 சதவீதம் பேர் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். கேரளாவில் மட்டும் இது 39.70 சதவீதம் ஆகும். கேரளாவின் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படாததும், துல்லியமான முடிவுகளை தராத ஆன்டிஜென் பரிசோதனைகள் அதிகம் நடத்தப்படுவதும், சமூக அகலம் கடைபிடிக்காததும் ெகாரோனா பரவலுக்கு காரணமாகின்றன என மத்திய அரசு ெதரிவித்துள்ளது. மேலும் கேரளாவின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை குறைக்க கேரளா முதல் கட்டத்தில் வலுவான நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்பின் தளர்வுகள் அதிகம் அளிக்கப்பட்டதால், கட்டுப்பாட்டை மீறி தொற்று அதிகம் ஏற்பட்டு வருகிறது என்ற கருத்தும் உள்ளது. இந்திய அளவில் கொரோனா பரிசோதைன பாசிட்டிவ் விகிதம் 1.78 சதவீதமாகும். அதே நேரத்தில் கேரளாவில் இது 10 சதவீதத்துக்கும் குறைவாக இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரிசோதனையில் கேரளா 10வது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் 75 சதவீதம் ஆன்டிஜென் மற்றும் 25 சதவீதம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆன்டிஜன் பரிசோதனை முடிவு தவறாக கிடைப்பது,

மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய சவாலாக உள்ளது. கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால், அதன்பிறகு அவர்கள் மிகவும் துல்லிய முடிவை தரும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என கடந்த 2020 அக்டோபர் 7ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். ஆனால் இது நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டில அரசு சார்பில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. கர்நாடகாவிலும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையே அதிகம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்பின் தினசரி எண்ணிக்கையை 1,000க்கும் கீழே கொண்டு வர ேவண்டுமானால் ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: