திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே உடன்பிறப்புகளின் மூங்கில் சர்பத் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. ேகரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரி அருகே அகமலை பகுதியை சேர்ந்தவர் விபிதா. அவரது சகோதரர் நிதீஷ். இவர்கள் இருவரும் தாங்கள் நடத்திவரும் சர்பத் கடையில் பிஸியாக இருக்கிறார்கள். மூங்கில் சர்பத், பச்சை மாம்பழ சர்பத், குடம் கலக்கி சர்பத், நெல்லிக்காய் சர்பத் மற்றும் இஞ்சி சர்பத் இங்கு பிரசித்திபெற்றவை. இங்கு இவற்றின் தேவையும் அதிகமுள்ளது. அகமலை தர்மசாஸ்தா கோயில் மற்றும் ரயில்வே ஓவர் பிரிட்ஜுக்கு இடையில், மாநில நெடுஞ்சாலையில் இவர்களது சர்பத் கடை வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது.

கடையில் கூட்டம் அதிகரித்து விற்பனை உயர்ந்ததால், நிதீஷ் அருகிலேயே மற்றொரு சர்பத் ஸ்டாலையும் திறந்துள்ளார். இவர்களின் வகைவகையான சர்பத்களில் குறிப்பாக மூங்கில் சர்பத்துக்கு அதிக டிமாண்ட் உள்ளது. இஞ்சி, மிளகாய், உப்பு, மிளகு, ஏலக்காய் சேர்த்து மூங்கில் சர்பத் தயாரிக்கப்படுகிறது. இத்துடன் அவர்களின் வணிக ரகசியங்கள் அடங்கிய ேவறு சில ெபாருட்களும் கலந்துள்ளன. இது மூங்கில் குடங்களில் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. உடன்பிறப்புகளின் இந்த சர்பத் தொழில் ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், தற்போது மூங்கில் சர்பத் ஒரு ‘ஹீரோ’வாக மாறியுள்ளது. இருப்பினும் விலையோ மிகவும் குறைவுதான். இஞ்சி சர்பத் ₹20, மூங்கில் சர்பத் ₹30, பச்சை மாம்பழ சர்பத் ₹50 என விற்பனை செய்யப்படுகின்றன.

Related Stories:

>