குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம்

சென்னை : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை, இந்தியாவின் குடியரசு நாளில், 60 நாட்களாக  அறவழிப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் முன் கூட்டியே தெரிவித்து டிராக்டர் அணி வகுப்பு நடத்தும் நிலையில், அவர்கள்மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசியதும், தடியடி கொண்டு கொடூரமாக   தாக்கியதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது.

அமைதி வழி போராட்டம் நடத்தினால் துப்பாக்கிப் பிரயோகமா?அடக்கு முறையைக் கைவிட்டு, அமைதி வழி போராடுவோரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யட்டும்!

குடியரசு  நாளில் தலைநகரில் விவசாயிகள்மீது தாக்குதல் செய்தி உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் பொது மரியாதையைக் குலைக்கும்.விவசாயிகளின் வயிற்றில் அடித்தது போதாதா? இப்பொழுது விவசாயிகளையும் அடிக்கும் காரியத்தில் ஈடுபடுவதா?அமைதியான சூழலை அரசே வன்முறை மூலமாக மாற்றிவிடக் கூடாது. எச்சரிக்கை!, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: