கயா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குந்தி தேவி. தற்போது அவரது மகன் அஜய் யாதவ் இதே தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கடந்த 2013ல் நடந்த ஒரு கொலை வழக்கில் குந்தி தேவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிபதி சங்கம் சிங் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.