×

மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களைச் சந்திக்க உள்ளார். அவர் எந்தெந்த தேதிகளில் எங்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்ற விவரத்தை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 29ம் தேதி காலை 8 மணிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கலைஞர் சிலை அருகில் நகராட்சி அலுவலகம் முன்பு, திருக்கோவிலூர் சாலையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மதியம் 1 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேவூர் ஊராட்சி வேலூர் ரோட்டிலும், 30ம் தேதி காலை 8 மணிக்கு வேலூர் மத்திய மாவட்டம் பள்ளிக்கொண்டான் டோல்கேட் அருகில் கந்தனேரி ஊராட்சியிலும் மதியம் 1 மணிக்கு வேலூர் கிழக்கு மாவட்டம் பனப்பாக்கம் பேரூர் சோளிங்கரிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 31ம் தேதி காலை 8 மணிக்கு திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் நசரத்பேட்டை ஊராட்சி பூந்தமல்லி, பிப்ரவரி 1ம் தேதி காலை 8 மணி கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்டம் சார்பில் குந்தாரப்பள்ளி ஊராட்சி கிருஷ்ணகிரி-ஓசூர் மெயின் ரோடு, மதியம் 1 மணி தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அருகில் கிருஷ்ணகிரி-சேலம் மெயின் ரோடு தருமபுரி  ஒன்றியத்திலும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Tags : MK Stalin ,tour ,DMK ,announcement , MK Stalin's tour: DMK announcement
× RELATED கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்