டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி: டெல்லியின் முக்கிய இடங்களில் இணைய சேவை துண்டிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு.!!!

டெல்லி: டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டெல்லியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாக, விவசாயிகள் பேரணியை தொடங்கியதால் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். அது மட்டுமில்லாமல், கண்ணீர் புகை குண்டுகள் வீசும் போலீசார் மீது தாக்குதல் நடத்துகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் டெல்லியே போர்க்களமாகி இருக்கும் இந்த சூழலில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயி உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது

டிராக்டர் பேரணயில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சிங்கு, காசிப்பூர், டிக்ரி, முகர்பா சவுக், நங்க்லோய் ஆகிய இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் முக்கிய சாலைகள் முடப்பட்டுளள்து. குடியரசுத் தலைவர் இல்லம், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வன்முறை குறித்து விளக்கம் அளித்த டெல்லி காவல்துறை, அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்ல விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை அகற்றி எங்களை தாக்கினார்கள். நாட்டின் குடியரசு தினத்தன்று இது அமைதியான எதிர்ப்பு  அல்ல என்றனர். விவசாயிகள் யாரும் சட்டத்தை கையிலேடுக்க வேண்டாம் என்றும் டெல்லி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>