டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது : விவசாயிகள் விளக்கம்

டெல்லி : டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாக, விவசாயிகள் பேரணியை தொடங்கியதால் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். அதுமட்டுமில்லாமல், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் டெல்லியே போர்க்களமாகி இருக்கும் இந்த சூழலில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயி உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அந்த விவசாயி சரிந்து கிடக்கும் அந்த புகைப்படம் மனதை உலுக்குகிறது.

இந்த நிலையில், டெல்லியில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு  இல்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை  அடையாளம் கண்டுவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும் அரசியல் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில் பங்கேற்றவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளோம், விரைவில் அவர்களை பிடித்து தருவோம் என்று  கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.

நாங்கள் அல்ல:

டெல்லி போலீசார் விதிகப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சென்றவர்கள் போராடும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கிடையாது. அதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் பேரணிக்கான அனுமதி வழங்கிய டெல்லி போலீசாரிடம் இதுகுறித்த முழு விவரங்களையும் தெரிவிப்போம் என விவசாயிகள் சங்க தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.

Related Stories: