தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!

திருச்சி: புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினமான இன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும்  தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் விவசாயிகள் டிராக்டர் பேரணியை இன்று நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் விவசாய சங்கங்கள், கட்சி சார்ந்த விவசாய சங்கங்கள் இணைந்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று அந்த மாவட்டங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகளின் பேரணிக்கு காவல் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் தடையை மீறி இன்று டிராக்டர் பேரணி நடத்த தொடங்கினர். இதில் சில இடங்களில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசினர். தடையை மீறி பேரணி நடத்தியதாக ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்க நிர்வாகிகள், மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்..தடையை மீறி நடத்தப்பட்ட விவசாயிகளின் இருசக்கர பேரணியை போலீஸ் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. லேசான தடியடியும் நடத்தப்பட்டது.

கடலூரில் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் படைவீரர்கள் மாளிகையில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்தஞ்சையில் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் டிராக்டர், மாட்டுவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் பேரணி செல்ல முயன்றனர். தஞ்சை புறவழிச்சாலை சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 4 டிராக்டர்களை மட்டும் பேரணியாக செல்ல அனுமதி வழங்கினர்.

Related Stories: