மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

நெல்லை : நெல்லை மாநகராட்சி 32வது வார்டில் குடிநீர் வசதி கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.நெல்லை மாநகராட்சி 32வது வார்டு ராவுத்தர் கீழத் தெருவிற்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி பெண்கள் காலிகுடங்களோடு எஸ்டிபிஐ மாநகர மாவட்ட செயலாளர் புகாரி ஷேக் தலைமையில் திரண்டு வந்து மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எஸ்டிபிஐ தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் செய்யது மைதீன், ராசிக் இமாம், நதிரா காஜா, ஹைதர் இமாம் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

திடீரென மண்டல அலுவலகம் முன்புள்ள சாலையையும் மறிக்க முயன்றனர். விரைவில் குடிநீர் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Related Stories: