பிரதமர் மோடிக்கு தலைப்பாகை பரிசளிப்பு.. 'சாமியே சரணம் ஐயப்பா'கோஷம், மாமல்லபுரம் கடற்கரை கோவில்.. குடியரசு தின விழாவில் சிறப்புகள்!!

டெல்லி : டெல்லி குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வாகன அணிவகுப்பு நடந்தது.மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரியுடன் வாகனம் அணிவகுத்துச் செல்ல பெண்கள் பரதநாட்டியம் ஆடினர்.

டெல்லியில் நடைபெற்று வரும் 72 குடியரசு தின விழாவின் முக்கிய அம்சங்கள்:

*டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் சாமியே சரணம் ஐயப்பா கோஷம் ஒலிக்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணை அணிவகுத்து சென்ற போது சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் ஒலித்தது.

*குடியரசு தின விழாவை ஓட்டி பிரதமர் மோடிக்கு, ஜாம்நகர் அரசு குடும்பத்தினர் தலைப்பாகை பரிசளித்தார்..குஜராத் அரச குடும்பத்தினர் பரிசளித்த தலைப்பாகையுடன் போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

*நாட்டின் போர் வலிமையை பறைசாற்றும் வகையில் போர் தளவாட வாகனங்களில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.எம் ஐ. 17 வி. 5 ரக ஹெலிகாப்டர்கள் தேசிய கொடியுடன் வான் சாகசத்தில் ஈடுபட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

*பிரம்மோஸ் ஏவுகணைகள், பீஷ்மா டாங்குகள், நவீன பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றனர். எல்லையில் பாலம் அமைக்கும் டி-70 டாங்கி வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

* கடற்படையைத் தொடர்ந்து விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. *ரபேல் விமானம் முதன்முறையாக இடம்பெற்று சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளது.

*எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் ஒட்டக அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  

*கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களின் வாகன ஊர்திகள் இடம்பெற்றன.

*தமிழகம் உட்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.குஜராத்தின் சூரிய கோவில் வடிவம், பாரம்பரிய நடனத்துடன் அணிவகுப்பு ஊர்தி,தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பழங்குடி கலைநிகழ்வுகளுடன் அஸ்ஸாம் மாநில ஊர்தி, கேதார்நாத் கோவில் வடிவமைப்புடன் உத்தரகாண்ட் மாநில ஊர்தி, பாரம்பரிய இசை வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநில ஊர்தி ,ராமர் கோவில் வடிவமைப்புடன் உ.பி. மாநில ஊர்தி-,இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துடன் மேற்கு வங்க மாநில அரசின் அணிவகுப்பு ஊர்தி ஆகியவை இடம்பெற்றது

Related Stories: