×

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது..! தொற்று நீங்கி நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

பெங்களூரு: பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98% இருந்து 97% ஆக குறைந்துள்ளது என விக்டோரிய அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா நாளை விடுதலையாகவிருக்கிறார்.

அதற்கான நடைமுறைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சசிகலா உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாகவும், கொரோனா தொற்று உறுதியானதாகவும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருந்து சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் பின்புலத்தில் அரசியல் ரீதியான காரணங்கள் இருப்பதாக சசிகலாவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், கர்நாடக மனித உரிமை ஆணையத்திடமும் புகாரளிக்கப்பட்டது. இதனிடையே, சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது. இந்த நிலையில், சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98ல் இருந்து 97 ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சீராக உணவு உட்கொள்வதாலும் உதவியுடன் நடப்பதாகவும் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு 170 ஆக உள்ளதால் சசிகலாவை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்றும் சிகிச்சைக்கும் அவர் ஒத்துழைக்கிறார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Sasikala , Sasikala's health is stable ..! Increased immunity to infection: Hospital management explanation
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!