×

ரயில் மோதி இருவர் பலி

ஆவடி: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கானூர்ஷேக்(29). அன்னனூரில் தங்கி கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். திருமுல்லைவாயில் - அன்னனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மின்சார ரயில் கானூர்ஷேக் மீது வேகமாக மோதியது. இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். கோயமுத்தூரை சேர்ந்தவர் துரைசாமி(55). தனது மனைவியுடன் அம்பத்தூரில் வசிக்கும் மகன் கோகுல் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது மகனுடன் கோயமுத்தூருக்கு புறப்பட்டார். அம்பத்தூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது மின்சார ரயில் வேகமாக வந்தது. எதிர்பாராதமாக ரயிலை எட்டிப் பார்த்தபோது தவறி விழுந்தார். அப்போது ரயில் மோதி மனைவி, மகன் கண்முன் பரிதாபமாக இறந்தார்.


Tags : Two killed in train collision
× RELATED மேட்டூரில் சோகம் சரக்கு ரயில் மோதி ஐடிஐ மாணவர் பலி