×

அம்மன் தாலி திருட்டு

பூந்தமல்லி: பூந்தமல்லி குயின் விக்டோரியா தெருவில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுரேஷ் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம்  இரவு கோயிலின் நடையை சாத்திவிட்டு சென்றார். நேற்று காலை  கோயிலை திறந்துள்ளார். பின்னர் வழக்கம்போல் அம்மனுக்கு பூஜை செய்தபோது அம்மன் கழுத்தில் இருந்த 3 கிராம் தங்க தாலி செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்பேரில் பூந்தமல்லி  போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் கழுத்தில் இருந்த தங்க செயின் மாயமானது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரிக்கின்றனர்.


Tags : Amman Tali , Amman Tali theft
× RELATED எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு