விருது பெற்ற சிறுவர்களுடன் கலந்துரையாடல் தலைவர்களின் சுயசரிதை படிக்க மோடி அறிவுரை

புதுடெல்லி:நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 32 சிறுவர்கள் பல்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டுக்கான பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடினார். அப்போது விருது பெற்ற மாணவர்களை பாராட்டிய பிரதமர், ”பணியாற்றுவதை நிறுத்தாதீர்கள். அனைத்து நேரத்திலும் பணிவுடன் இருங்கள். நாட்டுக்காக பணியாற்றுங்கள். தலைவர்களின் சுயசரிதைகளை படியுங்கள். அவை உங்களை ஊக்கப்படுத்தும். நவீன வேளாண்மை நாட்டுக்கு இப்போது மிகவும் அவசியமாகும். தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறுவர்கள மிகப்பெரிய பங்கு வகித்துள்ளனர்” என்றார்.

Related Stories:

>